நடிகர் விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவுக்கும், அதர்வாவின் தம்பி ஆகாஷுக்கும் கடந்த ஆண்டு சென்னையில் நிச்சயதார்த்தம் நடந்தது.அவர்களுக்கு ஆகஸ்ட் 24ம் தேதி திருமணம் நடத்த பெரியவர்கள் முடிவு செய்தார்கள். அதன்படி நேற்று முன்தினம் சினேகா பிரிட்டோ, ஆகாஷ் முரளியின் திருமணம் நடந்துள்ளது.கொரோனா வைரஸ் பிரச்சனையாக இருப்பதால் திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டார் மட்டுமே கலந்து கொண்டார்களாம். திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்த திருமணத்தின் மூலம் அதர்வாவும், விஜய்யும் உறவினர்களாகிவிட்டனர். முன்னதாக நிச்சயதார்த்தத்தின்போது விஜய்யுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை அதர்வா ட்விட்டரில் வெளியிட்டார். அந்த ட்வீட்டுக்கு லைக்ஸ் அள்ளியது. அதற்கு காரணம் விஜய் ரசிகர்கள் தான்.

சிங்கப்பூரில் கல்லூரியில் படித்தபோது சினேகாவுக்கும், ஆகாஷுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. வெவ்வேறு மதம் என்பதால் முதலில் அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தார்களாம். ஆனால் சினேகாவும், ஆகாஷும் தங்கள் காதலில் உறுதியாக இருப்பதை பார்த்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்காக மதம் பார்க்காமல் திருமணம் செய்து வைத்துள்ளனர். சினேகா, ஆகாஷுக்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here