கொரோனா வைரஸ் பாதிப்பின் உயிரிழப்பு உலக அளவில் 27,000ஐ எட்டியுள்ளது. இதனால் அனைத்து நாடுகளிலும் வணிக வளாகங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளது.

இதிலிருந்து மக்களை காக்கும் பொருட்டு பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்தும், அந்த வைரஸ் பரவுவதை தடுக்க முடியவில்லை , தமிழகத்திலும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மால்கள், தியேட்டர்கள், டாஸ்மாக் உள்ளிட்ட மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களையும் மூடப்பட்டுள்ளன.அதே போல் தமிழகத்தில் உள்ள 8 மத்தியச் சிறைகளிலும் அதன் கிளை சிறைகளிலும் உள்ள கைதிகளைச் சந்திக்கத் தமிழக அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனால் குடும்பத்தாருடன் பேச மாற்று ஏற்பாடுகளை செய்து தருமாறு கைதிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, தமிழ்நாடு சிறைத்துறை 58 ஸ்மார்ட் போன்களை வாங்கிக் கொடுத்துள்ளது.

அதன் மூலம், சிறைக்கைதிகள் குடும்பத்தினருடன் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாதத்திற்கு 7 முறை வீதம் ஒரு நாளுக்கு 5 முதல் 7 நிமிடங்கள் வீடியோ காலில் பேசிக் கொள்ளலாம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உறவினர்கள், கைதிகள் பேசும் எண்ணுக்கு திரும்ப அழைக்க முடியாத வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைதியின் மகள் தனது தந்தையுடன் கண்ணீர் மல்க வீடியோ காலில் பேசும் வீடியோ சிறை அதிகாரிகள் மனதை உருக்க வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here