தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகர் நடிகைகளுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அந்த அளவுக்கு பாடகர்களுக்கும் இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும் . தமிழ் சினிமாவில் எத்தனையோ பாடகர்கள் இருந்து வருகிறார்கள்.  அவர்களில் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டவர் தான் பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள்.  இவரது குரல் வளத்திற்கு அசையாத ஆட்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.  மேலும் இவரது பாடல்களுக்கு என்று பல ரசிகர்கள் இவரது பக்கம் இன்றும் இருந்து வருகிறார்கள் . மேலும் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடி மக்களை மகிழ்வித்து இருக்கிறார்.  இவரது பாடல்கள் எண்ணில் அடங்காதவை என்று தான் சொல்ல வேண்டும் .

இவ்வாறு இருக்கும் நிலையில் பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் கர்நாடக இசைக் கலைஞரும் பாடகி ஆவார்.  தற்போது இவர் இங்கிலாந்தில் லிவர்பூர் என்ற நகரில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்று இருக்கிறார் . அதன் காரணமாக அவர் அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மயங்கி கீழே விழுந்தார் .

இதன் தாக்கமாக இவர் சுயநினைவை இழந்து இருக்கிறார் . உடனே அவரை மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் மேலும் இவருக்கு மூளையில் ரத்தக் கசிவும் ஏற்பட்டு இருந்தது அப்போது தெரிய வந்தது.  மேலும் தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் சுயநினைவை இழந்தது மட்டுமில்லாமல் கோமா இலைக்கும் சென்றுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது .

இதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு உள்ள நிலையில் சற்று ஆபத்தான நிலையிலேயே இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.  இந்த சம்பவமானது திரை பிரபலங்களை மிகவும் சோகத்தில் மூழ்கடிக்க செய்திருக்கிறது . மேலும் இவரது ரசிகர்களும் மக்களும் இவர் பூரண குணமடைந்து சீக்கிரம் திரும்பி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here