தமிழ் தொலைக்காட்சிகளில் உள்ள முன்னணி தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை வென்று படிப்படியாக உயர்ந்து தற்சமயம் நல்ல நிலைமையில் இருந்து வருபவர்கள் தான் ரோபோ சங்கர் என்பவர். இவர் ஆரம்ப காலங்களில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் அறிமுகமானார். இந்த நிகழ்ச்சியில் இவரது காமெடி திறமையை வெளிப்படுத்தினார் மேலும் இவர் மிமிக்கிரி செய்து மக்களை குஷி படுத்தி வந்தார். அதன் மூலம் இவர் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். மேலும் இதனை தொடர்ந்து இவர் இவரது திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார் என்று தான் சொல்ல வேண்டும் .
அதற்கு பிறகு இவர் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா ,தனுஷ் போன்ற நடிகர்களுடன் இணைந்து தற்சமயம் படங்களில் நடித்து வந்து கொண்டிருக்கிறார் . மேலும் அதனை தாண்டி இவர் தற்சமயம் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகவும் நடுவராகவும் இருந்து வருகிறார் .
மேலும் நடிகர் ரோபோ சங்கர் அவர்களின் மகளும் தற்சமயம் சினிமா துறையில் இறங்கி கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த வகையில் ரோபோ சங்கர் என்றாலே எப்படி இருப்பார் என்பது நம்மில் அனைவருக்கும் தெரியும் . அவர் மிகவும் பருமானாக இருந்து வருபவர்.
ஆனால் தற்சமயம் வெளியான அவரது புகைப்படங்களில் அவர் மிகவும் உடல் மெலிந்து பரிதாபமாக இருந்து வருகிறார் அதனை பார்த்தவுடன் அவரது ரசிகர்களும் மக்களும் இவருக்கு என்ன பிரச்சனை என்று கேள்விகளை எழுப்பி வந்தனர் . மேலும் அதற்கு விடை தற்சமயம் தெரிந்து விட்டது .
நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் சில காலங்களாகவே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து இருக்கின்றார் . மேலும் இவர் கூடிய விரைவில் குணமடைந்து பழைய நிலைமைக்கு வருவார் என்று அவரது குடும்பத்தினர் கூறி இருக்கிறார்கள்.
தற்சமயம் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு இருக்கும் நடிகை ரோபோ சங்கர் விரைவில் குணமடைய வேண்டும் என்று மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.