விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன….அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் பாரதி கண்ணம்மா சீரியல் ஒன்றாகும்….இந்த தொடர் ஆரம்ப காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் பல திருப்பங்களுடனும் ஓடி கொண்டிருக்கின்றது…..
இந்த சீரியலின் முதல் பாகத்தில் பாரதியாக அருண் பிரசாத் அவர்களும் கண்ணம்மாவாக வினுஷா தேவி அவர்களும் நடித்து இருந்தனர்…..பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சமீபத்தில் தான் முடிவடைந்தது…..பின் இந்த சீரியலின் இயக்குனர் எதிர்பாராத விதமாக இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.
பாரதி கண்ணம்மா தொடர் முதல் பாகம் முடிந்த கையோடு இரண்டாம் பாகம் விருவிறுபாக ஓடிக் கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் சமீப காலங்களில் வெள்ளித்திரையை போலவே சின்னத்திரையிலும் அதிகமான பாலியல் புகார்கள் வந்த கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் தான் பாரதி கண்ணம்மா பகுதி 2 சீரியலில் மது என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் யூடுப் புகழ் ரேஷ்மா பிரசாத் தனக்கு நடந்த சம்பவத்தை ஊடகத்திற்கு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்…..அவர் கூறி இருப்பதாவது ” சின்னத்திரையில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கூட அட்ஜ்ஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் அப்படி உங்களுக்கு சம்மதம் இருந்தால் இந்த கதாபாத்திரம் எளிதாக கிடைக்கும் என்றார்கள்….
பல பேர் இதைத்தான் கேட்டார்கள் நான் அட போங்கடா உங்களுக்கு வேற வேலையே இல்லையா என்று வந்து விட்டேன்…. அதன் பின்னர் ஒரு நிகழ்ச்சிக்கு என்னை தொடர்பு கொண்ட பொழுது அல்லிகேஷன்லேயே அட்ஜஸ்ட்ன்ட் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது…
நான் அதற்கு நோ சொல்லிவிட்டேன்… பின்னர் என்னை போனில் தொடர்பு கொண்டு மீண்டும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேட்டனர்…என்று தனக்கு நடந்ததை வெளிப்படையாக இவர் கூறியுள்ளது ரசிகர்கள் மற்றும் ஊடககங்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது….