தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களின் மரணம் தற்சமயத்தில் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். கடந்த ஒரு வாரமாகவே சினிமா உலகில் பிரபலங்களாக இருந்த இயக்குனர் விஸ்வநாத் பிரபல பாடகி வாணி ஜெயராமன் என முன்னணி பிரபலங்கள் காலமாகி வந்தார்கள். அந்த சோகமே இன்னும் மீலாத நிலையில் தற்சமயம் மீண்டும் ஒரு சோக நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது தமிழ் சினிமா உலகம் .
அந்த வகையில் மீண்டும் ஒரு நடிகரின் மரணம் சினிமா உலகத்தை சோகத்திற்கு கொண்டு சென்றுள்ளது .மலையாள சினிமாவில் பிரபலமாக இருந்து வந்தவர் தான் நடிகை சிபி சுரேஷ் என்பவர். மலையாள தொலைக்காட்சியில் நடிகையாக இருந்து வந்தவர் . இவர் நடிகை மட்டும் இல்லமால் பல நிகழ்ச்சிகளை சுவாரசியமான முறையில் தொகுத்து வழங்கி சிறந்த தொகுபளிநியாக இருந்து பல ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வைத்துக் கொண்டிருந்தார் .
சில காலங்களாக இவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்று வந்து கொண்டிருந்தார். மேலும் திடீரென்று இவர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்து விட்டார் . இவருடைய மறைவு மலையாள சினிமாவில் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்..