தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருந்து வந்தவர் தான் நடிகர் மயில்சாமி.இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே பல மேடை நிகழ்ச்சிகளை பங்கேற்று இருந்திருக்கிறார். மேலும் இவரது மிமிக்கிரியின் திறமை மூலம் பல ரசிகர்களை சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக கைக்குள் வைத்திருக்கிறா. மேலும் அதன் பிறகு தனது 20 வயது ஆனதும் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . பிறகு படிப்படியாக முன்னேறி நகைச்சுவை கலைஞர்களில் முன்னணியில் இருக்கும் ஒருவராக இருந்து வந்தார் . இவர் நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர கதாபாத்திரங்களிலும் தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமடைந்தார் இதற்குப் பிறகு அவர் அபூர்வ சகோதரர்கள் , வில்லாதி வில்லன் , சிவலிங்கா போன்ற திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் இதுவரை இவர் தமிழ் சினிமாவில் மட்டுமே 100 திரைப்படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்திருக்கிறார்.

சூர்யாவின் படத்தில் தங்க பஸ்பம் உண்டு கருப்பாக மாறி புதிய நகைச்சுவையும் வழிமொழிந்தார் பிறகு நடிகர் விவேக் அவர்களுடன் சேர்ந்து தூள் படத்தில் அசத்தியிருப்பார் மேலும் அந்த படத்தில் அவருடன் செய்யும் நகைச்சுவைகளும் லூட்டிகளும் தமிழில் இன்றும் பலரால் பார்க்கப்பட்டு ரசிக்கப்பட்டு வந்து கொண்டு தான் இருக்கிறது.அதற்குப் பிறகு இவர் குணச்சித்திரங்களில் அப்பாவாகவும் மாமாவாகவும் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை மிஞ்சும் அளவிற்கு தத்ரூபமாகவும் நடித்திருப்பார்.

பெரும்பாலும் இவரது நகைச்சுவை காமெடிகள் கலைவாணர் நடிகர் விவேக் அவர்களுடன் இருக்கும் மேலும் தற்சமயம் இவர் திடீர் மாரடைப்பு காரணமாள் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆனது தமிழ் சினிமா ரசிகர்களிடமும் கலைஞர்களிடமும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது .

மேலும் பல பிரபலங்கள் உயிரிழந்து வந்த நிலையில் தற்சமயம் இவரது மறைவும் ரசிகர்களை நீங்காத துயரைக்கு அனுப்பி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் மேலும் இந்த நிலையில் இவர் மறைவிற்குப் பிறகு இவரது வீடியோ பதிவு ஒன்று வைரல் ஆகி வருகிறது இதோ அந்த பதிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here