என்னதான் நவீன உலகத்தை நோக்கி பலதரப்பு மக்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தாலும் ஒரு சில இடங்களில் சாதி அடைக்கும் முறைகள் என்ற அளவிலும் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன ஆனால் அது வெளி உலகத்திற்கு புலப்படுவது அதிசயமாகவே உள்ளது இதனை வெளிக்கொண்டுவரும் விதமாக பல்வேறு படங்கள் தற்போது வெளியாகி கொண்டு உள்ளனர் அதில் 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் மிகப் பெரும் இடத்தை பிடித்தது…

இப்படத்தில் கதிர் ஆனந்தி யோகி பாபு போன்ற முன்னணி கதாபாத்திரங்கள் நடித்திருந்தனர் இதில் பரியனின் தந்தையாக வந்தவர் தான் தங்கராசு என்பவர் இவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்….இவர் தெருக்கூத்து கலைஞராக இருந்து வந்தார் பின்னர் நாளடைவில் தெருக்கூத்துக்களை நலிவடைய தொடங்க காய்கறி வியாபாரங்களை மேற்கொண்டு வந்தார் இந்த நிலையில் தான் பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் தோட்டத்தில் இரவு வேலைக்காக தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி தனது படத்திற்காக அழைத்து வந்தார்..

பின்னர் பரியேறும் பெருமாள் இல் நடித்த தங்கராசு அனைவருக்கும் பரிச்சயம் ஆனார் அப்படத்தில் இவரது காட்சி மிகவும் அனைவரையும் ஒரு நிமிடம் ஷாக்கடைய செய்யும் அளவிற்கு அமைந்திருந்தது…

தற்போது பரியேறும் பெருமாள் இவருக்கு வேறு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்காததால் இவர் தனது சொந்த ஊருக்குச் சென்று தனது மனைவியுடன் காய்கறி வியாபாரம் செய்து வந்தார் அண்மையில் ஏற்பட்ட மழை என்னால் அவரது வீடு சேதமடைந்தது இதனை அறிந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் இவருக்காக ஒரு வீடு கட்டிக் கொடுத்துள்ளார் அந்த வீட்டின் கிரகப்பிரவேசத்தின் போது மாரி செல்வராஜ் நல்லை மாவட்ட வட்டாட்சியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்…

அதன் பிறகு இவரைப் பற்றிய எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை இந்த நிலையில் தற்போது காலை ஐந்து மணி அளவில் தங்கராசு இயற்கை எய்து விட்டார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன இதை அறிந்த திரையுலகினர் அனைவரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here