தமிழ் திரையுல்கள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நடிகர் நடிகைகளாக மாறியவர்கள் பலர் அதில் தனது குழந்தை முகத்துடனும் அப்பாவித்தனமான பாவியத்துடனும் அனைவரதும் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் சாதிக்கா . இவர் ஆரம்ப காலத்தில் மகளாக பின்னர் தங்கையாக பின்னர் தொகுப்பாளியாகவும் தனது திரை பயணத்தை தொடங்கியுள்ளார்.இவர் நடித்துக் கொண்டே படிப்பிலும் தணிகை கவனம் செலுத்தி வந்தார் . 12 ஆம் வகுப்பு 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற சாதனையும் படைத்தார்.

 

பின்னர் முதன்முதலில் திரை உலகிற்கு மங்கை என்றும் சீரியலின் மூலம் வெளிவந்தார் . அதன் பின்னர் இவருக்கு பெரிய திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இவர் நடித்த முதல் படம் சீமானின் வீரநடை. பின்னர் ரோஜா வானத்தில் குட்டி லைலாவாகவும் சமஸ்தானத்தில் சரத்குமாரின் மகளாகவும் சத்யராஜின் ராமச்சந்திரா படத்தில் சத்யராஜிற்கு மகளாகவும் நடித்துள்ளார் .

 

இவர் மம்முட்டி முரளி அப்பாஸ் ரோஜா தேவயானி சினேகா முதலியார் நடித்த ஆனந்தம் படத்தில் முரளிக்கு மகளாக நடித்து அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தார்…அதன் பின்னர் தனது கல்லூரி வாழ்க்கையை தொடர்ந்து தங்கை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தவர்.

இளைய தளபதி விஜயின் குருவி படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் பின்னர் சுனைனா நகுல் நடித்த மாசிலாமணி படத்தில் சுனைனா விற்கு தங்கையாகவும் நடித்தார் இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

அது மட்டுமல்ல சுட்டி டிவியின் பிரபல தொகுப்பாளியாகவும் பணியாற்றியுள்ளார் மூன்று வருடங்களுக்கு மேலாக சுட்டி டிவியில் பணியாற்றியுள்ளார் மேலும் நான் மகான் அல்ல பாயும் புலி நெஞ்சில் துணி வந்தால் ஏஞ்சலினா போன்ற பல படங்களிலும் நடித்து ரசிகர்களை பெற்றுள்ளார்….

இவரது என் வீடு முற்றத்தில் ஒரு மாமரம் என்ற திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது… தற்போது அனைவரையும் கவரும் வகையில் இவர் புடவை அணிந்து வலைதளத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் வைரலானது….

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here