நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு எனும் பரிச்சயமான வசனத்திற்கு சொந்தக்காரர் நடிகர் சரத்குமார். 1954 டெல்லியில் பிறந்தார் தற்போது இவருக்கு 69 வயது ஆகின்றது. இவர் 1988 முதல் சினிமாவில் உள்ளார் இவர் நடிகர் மட்டுமின்றி ஒரு அரசியல்வாதியும் கூட முன்னாள் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்கத் தலைவரும் ஆவார்.பிரபல திரைப்பட நடிகை ராதிகாவின் கணவரும் கூட இவர்.  ஆரம்ப காலத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் சூரியன் படத்தின் மூலம் முதன்மை வேடத்தில் நடித்த வந்தார்.

 

இவர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என் கட்சியை தொடங்கி நடத்தி வந்தார் அது மட்டுமல்ல நாடாளுமன்றத்தில் உறுப்பினராகவும் இருந்துள்ளார் 2011 இல் தென்காசி தொகுதியில் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இவர்கள் சாய என்பவரை திருமணம் செய்து 2000 ஆண்டு இருவருக்கும் விவாகரத்து நடைபெற்றது. பின்னர் நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார். இவரது சூரியவம்சம் படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது . இன்றளவிலும் பேசப்படும் படமாகவும் உள்ளது .

 

மேலும் கோடீஸ்வரன் என்றும் பொது அறிவு போட்டியை தொகுத்து வழங்கியும் உள்ளார் இவரது மகள் வரலட்சுமி சரத்குமார்.வரலட்சுமி சரத்குமார் தமிழ் மற்றும் மற்றும் மொழிகளில் நடித்துக் கொண்டுள்ளார்.  தமிழில் சிம்புவுடன் போடா போடியில் அறிமுகமானார்.  பின்னர் விஷால், சசிகுமார் , விஜய்க்கு வில்லியாக போன்ற பல கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

 

சரத்குமாரின் முக்கியமான படங்கள் புலன் விசாரணை , சேரன் பாண்டியன் நட்புக்காக,  நாட்டாமை, பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகும்… அது மட்டுமின்றி ராகவா லாரன்ஸின் காஞ்சனா படத்தில் திருநங்கை வேடமிட்டு இவர் களம் இறங்கியது திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது.

மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வையும் தூண்டுவதாக இப்படம் அமைந்தது சரத்குமாரின் பெற்றோர்களைப் பற்றி பெரிதளவு எந்த விவரமும் தெரிந்திடாத நிலையில் அவர் தனது தந்தை புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் இதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here