தமிழ்சினிமாவில் என்றும் மறக்க முடியாத நடிகர் மற்றும் இயக்குனர் என்று சிலரை சொல்லலாம்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட மிகச்சிலரில் நடிகர் பார்த்திபனும் ஒருவர். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, எழுத்து என ஜொலித்து வருகிறார்.முதலில் கே.பாகியராஜின் உதவி இயக்குனராக இருந்த பார்த்தீபன் அவர் இயக்கிய புதிய பாதை திரை படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு ஆள் கிடைக்காததால் அந்த திரைப்படத்தில் தான ஹீரோவாக அறிமுகம் ஆனார்.இந்த திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆகவே தொடந்து ஹீரோவாக நடிக்க ஆரமித்தார்.

 

வித்தியாசமான கதைகளை தயாரித்து நடித்து வரும் பார்த்தீபன் கடந்த வருடம் அவரின் நடிப்பில் வெளியான ஒத்த செ ருப்பு படம் பெரும் வரவேற்பை பெற்றது.பெரும் வெற்றி பெறவில்லை என்றாலும் அனைவராலும் புதிய முயற்சிக்கு பாராட்ட பட்டு விருதுகளை வாங்கி குவித்தது.

 

பார்த்தீபன் இன்று வரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.குறிப்பாக பாரதி கண்ணம்மா,நீ வருவாய் என,வெற்றிக் கொடி கட்டு,அழகி,ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்கள் இன்றும் அனைவரின் மனதிலும் மறக்க முடியாத திரைப்படங்கள்.இவரின் பெரும்பாலான பழைய திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன.இன்று வரை பார்த்தீபன் வடிவேலு காமெடி என்றால் பார்க்கும் போதெல்லாம் சிரிப்பை வரவழைக்கும்,அந்த அளவுக்கு இவிங்க அலப்பறை காமெடிகள் இருக்கும்.

 

பார்த்தீபன் முதல் படத்தில் ஜோடியாக நடித்த சீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்,ஆனால் க ருத்து வே றுபாடு காரணமாக இருவரும் சில வருடங்களுக்கு முன் பிரிந்துவிட்டனர்,இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தாலும் இந்த தம்பதியின் மகள் திருமணத்தில் இருவரும் ஒன்றாக இருந்து செய்து வைத்தனர்.

 

இந்நிலையில் அவர் எழுதிய கி றுக்க ல்கள், கவிதைத்தொகுப்பு, கதை திரைக்கதை வசனம் திரைப்படத்தின் இயக்கம் ஆகிய புத்தகங்களை அறிமுகப்படுத்தும் விழா கோவையில் நடைபெற்றது.

 

இதில் கலந்துகொண்டு பேசிய அவர் சிங்கிள் ஷாட்டில் இரவில் நிழல் படத்தை இயக்குகிறேன். விஜய் சேதுபதியுடன் மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளேன். புஷ்கர் காயத்திரி இயக்கத்தில் வெப் சீரிஸில் நடிக்கிறேன்.

 

வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில் 3 நாட்கள் கூட சாப்பிடாமல் வேலை செய்திருக்கிறேன். சபரிமலைக்கு போகவும், சாப்பிடவும் கூட காசில்லாமல் 75 நாட்கள் விரதமிருந்து அதன் பின்னர் சென்றேன் என கூறியது பலரையும் மனம் உறைய வைத்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here