பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந் நிலையில் தற்போது அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த 2017ம் பிப்ரவரி 15ம் தேதி முதல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.சசிகலாவின் த ண் ட னை காலம் வரும் 27ம் தேதியுடன் முடிவடைவதால், அவரை அன்று விடுதலை செய்வதாக கர்நாடக சிறை துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதனிடையே, சிறையில் இருந்த சசிகலாவுக்கு தி டீ ரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

அதன்பின்னர், ப்வ்ரிங்கில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் முடிவு வந்தது.அதன் பின் அம்மாருத்துவமனையில், சிடி ஸ்கேன் உள்பட சில வசதிகள் இல்லாததால் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று மாலை சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவனை அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், சசிகலா அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும். தீ வி ர சிகிச்சைப் பிரிவில் சசிகலா தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சர்க்கரையின் அளவு சற்று அதிகமாக உள்ளது எனவும், நுரையீரல் தொற்று மேலும் பரவாமல் தடுக்க சசிகலாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, நடத்தப்பட்ட ஆர்டி பிசிஆர் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், அவர் விக்டோரியா மருத்துவமனையிலுள்ள கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here