மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆற்றங்கரையோரம் புதையல் கிடைப்பதாக வதந்தி ஒன்று கிளம்பிய நிலையில் அப்பகுதியில் மக்கள் அனைவரும் குழி தோண்டி புதையலை தேடி வருகின்றனர்.ஆனால், காவல்துறையின் அறிவிப்பை ஏற்க மறுத்து பொது மக்கள் கடந்த நான்கைந்து நாட்களாக தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.அங்கு புதையல் தேடுதலில் ஈடுபட்டுள்ள இளைஞர் ஒருவர் 24 மணி நேரமும் தொடர்ந்து புதையல் இருக்கிறதா என தேடி வருகிறோம். எங்களுக்கு பழங்கால நாணயம் கிடைக்கும் என்பதில் உறுதியாக உள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

அதே போல, சில தினங்களுக்கு முன் கிடைத்த நாணயங்களை தொல்லியல் துறை சோதனை செய்ததில் அவையனைத்தும் வெண்கலம் மற்றும் இரும்பினால் ஆனது என்றும், மக்கள் நினைப்பது போல தங்கம் அல்லது வெள்ளி நாணயங்கள் அல்ல என்றும் தெரிவித்துள்ளது.

ஆனால், யார் கேட்பதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அப்பகுதி மக்கள் புதையல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் மக்கள் சூழ்ந்து கடும் பரபரப்புடன் காணப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here